உன் அன்னைக்கு நன்றி 2011 july
அன்னையே

என் ஒவ்வோர் அங்கத்தையும்
பரிசாய் தந்தவளே
உன் வியர்வை என் நெஞ்சில்
உதிரமாய் ஓடுதடி
அருளுக்கு அம்பிகையாம்
எனக்கு எல்லாவற்றிக்கும்
நீயே அருளாம்பிகையாம்
சோகம் கவலை என்னை துரத்த
பொதி சுமந்த தெய்வமாய்
சுமை தாங்கிய தெய்வம் நீயடி
கருவுற்ற நாளில் இருந்து
எமக்காய் வாழ்ந்து
பெண்ணியம் காத்தவள் நீ
என் ஒற்றை அன்பில் பற்றுண்டு
ஒத்தையாய் எங்கும் உன் அன்புக்கும்
என்றும் அடிமை நான்
உன்னை பெற்ற
உன் அன்னைக்கு நன்றி...
---------------------------------------------------------------------------------------------------------
நட்பு!!

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும் அதன்
“வாசம்”என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும்,
சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு”
எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
---------------------------------------------------------------------------------------------------------------
புது வாழ்வு...
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...
கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினா
-------------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் சிந்தி
பத்து வருடத்துக்கு முன்
நீ
பாதி உடையுடன்
பசி தீர்த்துக் கொள்ள
வழியற்று பட்டினியுடன்
இருந்தாய் – அந்த
காலமதை நீ மறந்துவிடாதே
தகர வீட்டு வெட்கை
தாங்காமல் காற்று வாங்க
மரநிழல் கீழ் நீ
தங்கிய காலமதை
நீ மறந்துவிடாதே
பசிக்கும் வேளை
உனக்கு
உணவு தந்து உடுப்பு
தந்து வாழவைத்த
பெரியார் சிலா்
அவர்களை மறந்துவிடாதே
ஆனால் இன்று
வெளிநாட்டிற்கு பிள்ளைகள்
சென்ற உடன்
ஏசி றூமில் இருந்து
கோலிங் பெல் அடிக்காமல்
உள்ளே வந்த
பெரியாரை ஏசுகிறாய்
இது நியாயமா?
கொஞ்சம் சிந்தி
அன்று சிந்திய கண்ணீரை……
0 கருத்துகள்:
கருத்துரையிடுக