RSS

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம் இனி சவுதி அரேபியாவில்! .


2011/08/04.theepan..உலகின் மிக உயரமான புதிய கட்டிடம், சவுதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன்
அமெரிக்க டாலர்கள் செலவில் பின் லேடன்ஸ் குரூப் கம்பெனியினால் ஜித்தாவின் ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.
2008 இல் இதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்க தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மாதிரி வடிவத்தை அறிமுகம் செய்யும் சவுதி மன்னர்
கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீற்றர் உயரம், (852 மைல், 1401 மீற்றர்) ஹோட்டல், சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம்.
சவுதி பின்லேடன் குரூப் கட்டிட நிர்மாண பொறுப்பை ஏற்றுள்ளது. தற்போது உலகின் உயரமான கட்டிடங்களாக திகழும் டுபாயின் பூர்ஜ் கலிஃபியா மற்றும் நியூயோர்க்கின் சுதந்திர கோபுரம் என்பவற்றை விட இக்கட்டிடயம் உயரமாக அமைக்கப்படவிருப்பது உறுதியாகியுள்ளது.
நியூயோர்க் சுதந்திர கோபுரம்
டுபாய் பூர்ஜ் கலிஃபா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: