*********************************************************************************************************************** | |||
---|---|---|---|
தனம் தரும் கல்விதருமொருநாளுந் தளர்வறியா மனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே | |||
இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் ஆண்டுற்சவ சித்திரை பௌர்ணமி பொங்கல் விழா 2011. | |||
அன்னையினுடைய வருடாந்த ஆண்டுற்சவ சித்திரை பூரணை பொங்கல் விழாவானது கடந்த17.04.2011 ஞாயிற்று கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது அன்றுபகல் அபிசேகத்தினை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது மாலை 04.30 மணியளவில் அன்னையினுடைய தீர்த்தமாகிய இரணைமடு வாவியில் அடியவர்கள் கும்பதீர்த்தம் எடுக்கின்ற நிகழ்வும் வளந்து பானைகளுக்கு நீர் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான அடியவர்கள் இரணைமடு தீர்த்தத்தினை குடங்களிலே ஏந்தி கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் பண்பாட்டு கோலங்களுடன் தம் தலைகளிலே சுமந்து வந்து அன்னையினுடைய பாதார விந்தங்களிலே ஊற்றிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது அதேவேளை வளந்து பானைகளும் ஏனைய பானைகளும் வைத்து பொங்குகின்ற நிகழ்வு ஆலய முன்றலில் இடம்பெற்றது அன்றைய தினத்தில் காலைமுதல் பறவைகாவடிகள் எடுத்தும் பால்காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகளை ஏந்தியும பல அடியவர்கள் தங்கள் நேர்த்திகடன்களை பூர்த்திசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கன அன்றைய நிகழ்வுகளை அகிலமெங்கும் உள்ள அம்பிகை அடியார்கள் கேட்கும்வகையில் நேரலையில் வாரணம் இணையவானொலி மூலம் ஒலிபரப்பபட்டது அன்றைய தினத்தில் பெருமளவான அடியார்கள் ஆலய திருப்பணிக்கென உதவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. | |||
பாலஸ்தாபனம்(புனருத்தானம்) | |||
நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளான அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது இந்தவகையில் அதற்க்கு ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில்புனருத்தானம் (பாலஸ்த்தாபனம்)இடம்பெற்றுள்ளது அதனை அடுத்து ஆலய திருப்பணிகள் இடம்பெற்று அவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்குஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் . | |||
"இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் " "பாலஸ்தாபன அறிவித்தலும், திருப்பணி நிதிக்கோரிக்கையும்" | |||
யாழ்ப்பாண சித்தர் பரம்பரை தவமுதல்வர் யோகர் சுவாமிகளே இக்கோவிலின் கருவறை நிலையத்தினையும் மூலமூர்த்தியையும் முடிவு செய்தவர் இவற்றை செயற்படுத்தியவர்கள் சுவாமிகளின் தொண்டரும் யாழ் அரச அதிபருமாகிய அமரர் ம.ஸ்ரீகாந்தா அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட திருப்பணி சபையினர் இவர்களின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இக்கோவில். யோகர்சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் 1961ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்யப்பட்ட இவ்வாலயம் அதன்பின்னர் முறையே1981,1996 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டு மூன்று தேர்களும் கண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் முப்பெருமைகளையும் கொண்டு வன்னி பெருநிலப்பரப்பில் பாரிய வளர்ச்சி கண்ட கோவிலாக மிளிர்ந்தது இப் பெருங்கோயிலாகும். கடந்த நீண்ட கால அமைதி இன்மையால் ஆலயத்தில் இரண்டு முறை வழிபாடு பூசைகள் தடைப்பட்டுள்ளன இத்தடைகளை இடப்பெயர்வுகள் ஏற்ப்படுத்தின 1996ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் உடனடியாக பூசைகளை ஏற்பாடு செய்ய முடிந்தன 2008ம் ஆண்டு இடப்பெயர்வின்பின்னர் இப்போதுதான்(2010) அறங்காவலர் சபையினரால் கோவிலை பொறுப்பேற்க கூடியதாக இருந்தது கோவிலில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பரிவார கோவில்களும் புனரமைக்க வேண்டியுள்ளன முன்னர் 1996ம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளதால் இனிவரும் ஆண்டு திருக்குடமுழுக்கு அமைய வேண்டிய காலமாக உள்ளது. இந்நிலையில் 29/01/2010 இல் புனருத்தானம் (பாலஸ்தாபனம்) சிறப்பாக நடந்தது பின்னர் ஆரம்பமான திருப்பணி வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது இதுவரையில் ரூபா 03.05மில்லியன் செலவாகியுள்ளது இத் திருப்பணிகளுக்கு பலமில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக் கோவிலின் அருமை பெருமைகளை தெரிந்த வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள அன்பர்கள் அம்பிகை அடியார்களின் நிதியினை கொண்டுதான் இப்பணியை நிறைவு செய்யலாம் என நம்புகிறோம் அம்பாள் அடியார்கள் மனமுவந்து நிதியாகவோ பொருளாகவோ அளிக்கும் படியும் வேறு வழிகளில் உதவ முன்வரும் அன்பர்களிடம் இருந்தும் நிதியுதவி கேட்க்க பெற்று எமக்கு ஆதரவு நல்கும் படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம் இக்கோவில் வங்கி சேமிப்பு கணக்கின் இலங்கை வங்கி- கிளிநொச்சி கிளையில் 70212044 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பு செய்தும் உதவ முடியும். "அம்பாள் பணியில் அனைவரும் இணைவோம் அனைவரையும் இணைப்போம்" அம்பாள் பணியில் தங்கள் உதவியை வேண்டி நிற்கும் ஆ.க.செல்வவிநாயகம்( தலைவர் ) ந.சிவகுமார் (செயலாளர்) மு.இராமச்சந்திரன் (பொருளாளர்) நா.சோதிநாதன் (நிர்வாக செயலாளர்) அறங்காவலர் சபை இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் | |||
ஆலய நிர்மாண பணிகளின் போது எடுக்கப்பட்ட படங்கள் | |||
இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்
12:11 PM |
லேபிள்கள்:
ஆலய தரிசனம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக