நாராயணன் மேல் நாரதனுக்கு வந்தகாமத்தால் பிறந்தவை அறுபது பிள்ளைகளாம் அதில் ஒன்று இன்றாம் புத்தாண்டாம் இன்று புதிதாக ஓன்றும் இல்லை மீனுக்குள் இருந்த சூரியன் ஆட்டுக்குள் புகுந்ததாம் நாட்டுக்குள் பல தொல்லைகள் நாடுகளிடைப் பல பிரச்சனைகள் புத்தாண்டாம் இன்று புதிதாக ஓன்றும் இல்லை. அடுத்துக் கெடுத்த அதே பழைய இந்தியா காட்டிக் கொடுத்த அதே பழைய துரோகிகள் பாரமுகமாய் இருந்த அதே பழைய உலக சமூகம் புத்தாண்டாம் இன்று புதிதாக ஓன்றும் இல்லை. அதே பழைய அட்டூழியக் கும்பலின் ஆட்சி ஆரியப் பிணம் தின்னிப் பேய்களின் ஆதரவுடன் ஆணவச் சிங்களம் புத்தாண்டாம் இன்று புதிதாக ஓன்றும் இல்லை. பஞ்சாங்கம் எடுத்து இலாப நட்டம் பார்த்து கந்தாய பலன்களும் பார்த்து விடிவு வருமா என ஏங்கும் கூட்டம் புத்தாண்டாம் இன்று புதிதாக ஓன்றும் இல்லை. ஒரு கவிஞனின் வரிகள். |
புத்தாண்டாம் இன்று புதிதாக ஓன்றும் இல்லை.
10:54 AM |
லேபிள்கள்:
கவிதை தொகுப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக