RSS

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்


2011/08/04.                        வரலா
ற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகியது.இன்று காலை முதல் நடைபெறும் விசேட பூஜை, அபிஷேகங்களை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் நல்லூர் ஆலய கொடியேற்றத்தில் பங்கெடுத்து இருந்தார்கள்.தொடர்ந்து 25 தினங்களுக்கு நடைபெறவுள்ள நல்லூர் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிநீர், சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. உற்சவகாலத்தின் போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதுடன், ஆலய வீதிகளில் கண்காணிப்பு வீடியோ கமராக்களை பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் இந்த திருவிழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்க்கப்படுகின்றது






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: