RSS

கவிதை

கடவுளும் கவிதையும்

தடுத்தாட்கொண்டவன் கோவிலுக்குள் நுழையப் போனேன் அமர்ந்திருந்தவன் தடுத்தான் “எதற்காகப் போகிறாய்” “கடவுளைப் பார்க்க” “கடவுள் அங்கில்லை” “வேறெங்கே” தட்டை நீட்டினான் கடவுளானேன் நான்! யார் கடவுள் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தேன் வாழ்க்கையின் சோகங்களை எண்ணியபடி கருவறையில் தனியாக இருந்தவன் என்னருகே வந்து அமர்ந்தான் இருவரும் நெடுநேரம் பேசினோம் அவன் வெளியே சென்றான்! நான் உள்ளே சென்றேன்!!. குழந்தை விளையாட்டு நானும் என் நண்பனும் ஒரு போட்டி வைத்துக்கொண்டோம் அந்த இருட்டு அறையில் இருக்கும் கல்லை யார் முதலில் [..

பெண்ணியவாதிகளின் கவணத்திற்கு சில கவிதைகள்

நாம் எல்லோருமே ஒரு வகையில் பெண்ணியவாதிகள் தான். ஆனால் பெண்களை அதிகம் கவணிக்கும் இந்த சமூகம் ஆண்கள் மறந்து கொண்டிருக்கிறது என தோன்றுகிறது. அது தான் இந்தக் கவிதைகளுக்கு மூலம். பெண்ணியத்தைப் பற்றி அவர்களின் கவிதைகளில் நிறைய வலிகள் நிறைந்திருப்பது புரிந்தது. ஒருவேளை இந்தக் கவிதைகளில் ஆண்களின் வலிகளும் அவர்களுக்கு புரியலாம். மழலை சொல் ஐந்து வருடம் வெளிநாட்டில் உழைத்து சேர்த்து போதுமென ஊர்வந்து சேர்ந்தவனிடம் ஒட்டாமல் சென்ற அவன் குழந்தை ஓடி விளையாடுகிறது பக்கத்து வீட்டுக்காரனிடம்! [...]

கவிதை கவிதை

இரவுப் பெண் சீவி சங்காரித்து அலுவலக்ம் போக ஏகம் பேர் நிற்கும் ரயில் நிலையத்தின் ஓர் அதிகாலை…. வந்து நிற்கின்றாள் பெண்ணொருத்தி!. இரவு தூங்கவில்லையென அந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றன அதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றன நீங்கள் தவறாக யூகம் செய்யாதீர் அவள் கால்சென்டரில் வேலை செய்யும் கன்னிப்பெண்! வருங்கால தமிழகமே மகனுக்கு சொத்துன்னு படிக்க வைச்சதை பார்த்திருக்கேன் பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன் வீடு கட்டறத பார்த்திருக்கேன் கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனை இப்பதானே [...]

கோணல் கவிதைகள்

மரணம் ஒவ்வொரு கிணற்றுக்குள்ளும் இருக்கின்றன நீச்சலறியா பிஞ்சுகள்! நவீனப் பெண் பைக் ஓட்டும் இளைஞன் பின்னால் துப்பட்டாவில் முகம் புதைத்து கட்டியனைத்து அமர்ந்திருக்கின்றாள் வேறொருவனுக்கு மனைவியாகப் போகின்றவள்!. ஆச்சிரியம் ஒரு கருமுட்டைக்காக இலட்சம் விந்தனுக்கள் போட்டியிடும் விந்தையைப் போலவே இருக்கின்றது அரசியல் பதவிக்கான போட்டியும்! விசும்பல் தெருவில் அனாதையாகக் கிடக்கும் கொலுசினை எடுக்கையில் தொலைத்தவளின் விசும்பல் கேட்கின்றது!. சுமை தாங்கி பார்க்கும் பொழுதெல்லாம் நெஞ்சம் கணக்கிறது அதன் பின்னால்

கரும்பலகை காதல் – கவிதை

சிலுவைக் குறி கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போன கூட்டல்குறி மெல்ல மெல்ல வளர்ந்து சிலுவைக் குறியாகிக் கொண்டிருந்தது கணித வகுப்பிற்கு வந்த உன்னை நினைத்து! வெள்ளிக் கிழமை நீ வருவாய் என்பதற்காக அலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறாள் அம்பாள்!. பாவிகள் எல்லா இடங்களிலும் காதல் புனிதமானது! – ஆனால் காதலர்கள் தான் பாவிகளாக்கப்படுகின்றார்கள்! விந்தை நீ கிள்ளும் போது மட்டும் சிரிக்கின்றன பூக்கள்! கோவில் வெளியே நானும் உள்ளே கடவுளும் காத்திருக்கிறோம் உன் வருகைக்காக!.இருக்கும் கதையை எண்ணி!. (சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு [...]

கவிதை மூடநம்பிக்கைகள்

உரிமையாளன் மண் குலைத்து கரையான் உருவாக்கிய புற்றை… பாம்பு வந்து பிடுங்கிக்கொள்ள எல்லோரும் பாம்பு புற்றென்றார்கள். ஐயன் ஒருவன் அந்த பாம்பையும் விரட்டிவிட்டு அம்மன் சிலையை வைத்துப் போனான் எல்லோரும் சாமி புற்றென்றார்கள். கஸ்டப்பட்டு கட்டிய கரையானை மட்டும் கண்டுகொள்ள ஆளில்லை!. பிச்சைபுகினும் பெரிய உடலோடு இருந்தாலும் பிச்சையெடுக்கும் போது கூசிப்போகிறது யானை!. கல்யாண யோகம் கழுதையாக பிறந்திருந்தால் கூட கல்யாணம் செய்துவைத்திருபார் அப்பாவென புலம்பிக் கொண்டிருக்கிறாள் புரோகிதரின் முதல்பெண் முதிர்கன்னியாக! செத்தும் கொடுத்தவர்கள் அல்பாயுசியில் போன [...]

விபத்தில்லா கவிதைகள்

அருமை அப்பா ஆயிரம் கதைகள் பேசித்திரிந்தோம்!. ஆனால் இப்போது பேச ஒன்றுமில்லை, அப்பா மகனுக்குள் !… கனவு சொல்ல முடியாத இழப்புகளையும் மறைக்க முடியாத மகிழ்ச்சிகளையும் மிகை செய்தே காட்டுகின்ற கனவில், நேற்றின் தாங்கங்கள் சில இருக்கின்றன. ஒரு வேளை நாளையைக்கூட காட்டாலமென்ற நப்பாசையில் கனவுகான உறங்குகிறேன்! ஊதுகுழாய் அடுப்பெரிய இடுப்பொடிய ஆச்சி ஊதும் ஊதுகுழாயில் இசைவடியும் ஓசைக் கேட்டு எழுந்து வந்தன புகைகள்!… நிர்வாணக் குழந்தைகள் அறியாமையோ ஆடையின்மையோ அழகாய்தான் இருக்கிறது குழந்தைகளின் நிர்வாணம்! உறவுகள் [...]

நடுநிசி கவிதைகள்!

யார் கவிதையோ! எல்லோரும் உறங்கும் அந்த நடுநிசியில் கன்னியொருத்தி கோலமிட நீர்தெரித்த வாசல்போல சாரல்மழையில் சாலை நனைந்திருக்கிறது! காலை முதல் கட்டித்திரிந்த சேலையை களட்டி எறிவதுபோல வெம்மையை எறிந்துவிட்டு பூமி குளிர்ந்திருக்கிறது!. இதையெல்லாம் ரசித்து சாலையோரம் நிற்கும் கவிஞனின் சிற்பம் கவிதையை எழுதி காற்றல் விடுகிறது! குளிருக்கு இதமாய் போர்வையிட்டு தூங்கிவிட்டு காற்றில் இருக்கும் கவிதையை பிடித்து காகிதத்தில் எழுதி என் பேரையும் இட்டுக்கொள்கிறேன்!. அரிக்கன் இரவெல்லாம் மகன் படிக்க மண்ணென்னைய் வேண்டுமென சுல்லிபொறுக்கி சோறுசமைத்திடுவாள் அன்னை! [...]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: