RSS

அல்சர்

அல்சரைப்பற்றிய சில  குறிப்புகள்.
அல்சர் வந்தவர்கள் வயிற்றை வெறுமனே விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமாக எதையாவது சாப்பிட்டுககொண்டே இருக்கவேண்டும்.

எமது வயிற்றினுள், வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு உள்ளது. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டில் காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும்.

லேசா கிழிந்தால் கூட, நேரடியாக வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயிற்றில் வலிஇ புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டையிலயே நிற்கின்ற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

அல்சர் ஏன் வருது?

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு, காலை உணவைத் தவிர்ப்பது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடுவது, அடிக்கடி காபி, டீ என குடித்து வயிற்றை நிரப்புவது.... சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றால் உடனே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கு உண்டு.

இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும். மிகவும் சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடுவதும் காரணம்.

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமாக மருந்து எடுத்துப்பார்கள் சிலர்.

மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேற்றபடி சாப்பாடு இருக்கவேண்டும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு.

வராமல் இருக்க...?

சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு இரண்டும் முக்கியம்.

கோபத்தைக் குறைச்சுக்கணும். அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்... நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.

கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்க்கலாம்.

ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.

மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்பிடாமல், கொஞ்சமாக, அடிக்கடி சாப்பிடலாம்.

எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடவேண்டும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்வது போல் தான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!

உங்கள் வைத்தியரையும் ஆலோசித்து செய்யுங்கள்!

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும். குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும்.

குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும்.

தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.

எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று கருதப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை.

அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம். தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.

தொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது. சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும். காயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

0 கருத்துகள்: