திருக்கோணமலை | |||
திருக்கோணமலை நகரின் ஒரு தோற்றம் | |||
| |||
உத்தியோகபூர்வ வலைத்தளம்: [1] | |||
அமைவிடம் | |||
மாகாணம் | கீழ் மாகாணம், இலங்கை | ||
மாவட்டம் | திருக்கோணமலை | ||
உள்ளூர் நிர்வாகம் | |||
உள்ளூராட்சி வகை | திருக்கோணமலை நகரசபை | ||
நகரபிதா | கௌரி முகுந்தன் | ||
---|---|---|---|
உப நகரபிதா | |||
மொத்த வாக்காளர் | 36,144 | ||
மொத்த வட்டாரங்கள் | |||
புவியியல் பண்புகள் | |||
அமைவிடம் | |||
சனத்தொகை - மொத்தம் (2001) - அடர்த்தி | ஆவது நிலை 88,454 ச.கி.மீ. 11056.75 | ||
சராசரி வெப்பநிலை | 28 பாகை செல்சியஸ் | ||
சராசரி மழைவீழ்ச்சி | 1630 மில்லி மீற்றர்கள் | ||
கடல் மட்டத்திலிருந்து உயரம் | 3 மீற்றர்கள் | ||
பரப்பளவு | 2.9 கி.மீ. | ||
நேர வலயம் | ஒ.ச.நே. +5.30 | ||
இதர விபரங்கள் | |||
குறியீடுகள் • அஞ்சல் • தொலைபேசி | 31000 +026, 060-226 | ||
திருக்கோணமலை[1] அல்லது திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] அமைவிடம்
இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
[தொகு] சனத்தொகை
2002 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருக்கோணமலை மாவட்டத்தில் 93, 441 குடும்பங்களைச் சேர்ந்த 384, 153 மக்களைக்கொண்டுள்ளது இந்த நகரம்.தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருக்கோணமலையில், சுதந்திரத்துக்குப்பின் தொடர்ந்துவரும் அரசாங்கங்கள், சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களின் அரசியல் செல்வாக்கைக் குறைத்து வருவதாகத் தமிழர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.திருக்கோணமலையின் கரையோரப் பிரதேசங்களிலும் பெரும்பான்மையான சிங்களக் குடியேற்றங்கள் அரசாங்கத்தால் நடைபெறுகின்றன.[தொகு] வரலாறு
இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கோயிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருக்கோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது.இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.
[தொகு] நிர்வாகக் கட்டமைப்பு
திருக்கோணமலை மாவட்டம் ஆனது 11 பிரதேசசபைகளாக வகுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன. திருக்கோணமலை பட்டினமும் சூழலும் - பெரும்பான்மையாகத் தமிழர்களைக் கொண்ட திருக்கோணமலை நகரப்பகுதி- குச்சவெளி - பெரும்பான்மையாகத் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம்.
- பதவிசிறிபுர - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
- கோமரன்கடவல - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமரேசன்கடவை தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
- மொரவெவ/முதலிக்குளம் (பழைய வழக்கில்) -முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான முதலிக்குளம் தற்போது பெரும்பான்மையாகச் பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
- தம்பலகாமம் - பெரும்பான்மையாகத் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
- கந்தளாய் - தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
- கிண்ணியா - பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசம்.
- சேருவில - பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
- ஈச்சிலம்பற்றை - தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
- மூதூர் - முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டபிரதேசம். தமிழர்கள் உள்ளபிரதேசம் இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.
[தொகு] பிரித்தானியர் ஆட்சி
1957 வரை திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. இது தற்போது இலங்கை இராணுவத்தால் பாவிக்கப்பட்டு வருகின்றது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன் இவை இலங்கை இராணுவத்தால் பயன்படுத்த படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே பிருத்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.[தொகு] கிழக்குப் பல்கலைக்கழகம்
திருக்கோணமலையில் தனியான பல்கலைக்கழகம் இல்லாத போதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று திருமலையில் உள்ளது. இது திருக்கோணமலை வளாகம் என அழைக்கப்படுகின்றது. முன்னர் திருக்கோணமலை நகரப் பகுதியில் அமைந்திருந்த கிழக்குப் பல்கலைகழக வளாகம் நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவருகின்றது.[தொகு] தொலைத் தொடர்பு
[தொகு] தொலைபேசி
குறியீடு: 026 (வேறு மாவட்டங்களில் இருந்தும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ள).- ஆரம்பிக்கும் இலக்கங்கள்
- 026-2 திருக்கோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்
- 026-4 திருக்கோணமலை சண்ரெல்
- 026-5 திருக்கோணமலை லங்காபெல்
- 060-226 திருக்கோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA இணைப்பு
[தொகு] கம்பி இணைப்புக்கள்
இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம் கம்பியிணைப்புக்களை வழங்கி வருகினறது.[தொகு] கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)
திருக்கோணமலையில் கம்பியற்ற இணைபுக்கள் தற்போதுள்ள யுத்த சூழ்நிலையாலால் அடிக்கடித் துண்டிக்கப் பட்ட நிலையிலேயே உள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் கம்பி இணைப்புக்களே அநேகமாகத் துண்டிக்கபடுவது குறைவாகவுள்ளது.- CDMA இணைப்புக்கள்
- TDMA (GSM) இணைப்புக்கள்
- மோபிட்டல் , இலங்கைத் தொலைத் தொடர்ப நிலையத்தின்
- மோபிற்றல் கோபுரங்கள் திருக்கோணமலை நகரம், கந்தளாய், புல்மோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. புல்மோட்டையில் அமைந்துள்ள கோபுரமானத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையோரமாக நகர்பேசியூடாகத் தொடர்புகொள்ளக் கூடியதாகவுள்ளதாகத் தெரிகின்றது.
- டயலொக்
- செல்ரெல்
- ஹச்
- மோபிட்டல் , இலங்கைத் தொலைத் தொடர்ப நிலையத்தின்
[தொகு] போக்குவரத்து
[தொகு] புகையிரதம்
திருக்கோணமலையில் இருந்து கொழும்பிற்கு காலை 10..00 மணிக்கும் மாலை 7.45 மணிக்கும் புகையிரதங்கள் புறப்படுகின்றன. மட்டக்களப்பு, பகுதிகளிற்குச் செல்பவர்கள் கல் ஓயா சந்தியில் பிரிந்து கொள்ளலாம் (வவுனியா செல்பவர்கள் மாஹோ பகுதியூடாகப் பிரிந்து கொள்ளலாம் எனினும் பெரும்பாலும் இது சாத்தியமாவதில்லை). அதாவது அங்கு புகையிரதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.கொழும்பிலிருந்து காலை புகையிரதம் காலை 6.05 இற்குப் புறப்படும் திருக்கோணமலை புகையிரதத்திலேயே மதவாச்சி,தலைமன்னார் திருக்கோணமலை,மட்டக்களப்பு பெட்டிகளும் இணைக்கப்படுவதால் திருக்கோணமலைப் பெட்டியில் ஏறியதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று. இப்புகையிரதம் மாஹோச்சந்தியில் இரண்டாக பிரிக்கப்பட்டு வடபகுதிப் பெட்டிகள் மதவாச்சி, தலைமன்னார் நோக்கியும் தென்பகுதிப் பெட்டிகள் திருக்கோணமலை,மட்டக்களப்பு நோக்கியும் புறப்படும். கொழும்பிலிருந்து இரவுப் புகையிரதம் இரவு 9.00 இற்குப் புறப்படும் திருக்கோணமலை புகையிரதத்திலேயே திருக்கோணமலை,மட்டக்களப்பு பெட்டிகளும் இணைக்கப்படுவதால் திருக்கோணமலைப் பெட்டியில் ஏறியதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.தொடரூர்தியின் பிற்பகுதியில் உள்ள மூன்று பெட்டிகள் மட்டக்களப்பிற்கும் ஏனைய முற்பகுதியில் திருக்கோணமலைக்கும் ஆனவை. மட்டக்களப்பு நோக்கி பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் புகையிர பெட்டிகளில் மாறவேண்டியதில்லை.கொழும்பிலிருந்து இரவு 7:15 இற்குப் புறப்படும் மட்டக்களப்பு கடுகதி புகையிரதத்தில் திருக்கோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் ஏறிக்கொள்வதன் மூலம் மட்டக்களப்புக்கு செல்ல முடியும்.
[தொகு] பேருந்து
[தொகு] திருக்கோணமலை-கொழும்பு
திருக்கோணமலையில் இருந்து நேரடியாக அரச பேருந்து சேவையானது காலை 6:15, 7:15 மாலை 1:50 மணியளவில் திருக்கோணமலையில் இருந்து கொழும்பிற்கு புறப்படுகின்றது. கொழும்பில் இருந்து காலை 6:30, 7:30 ஆகிய நேரங்களில் கொழும்பில் இருந்து திருக்கோணமலைக்கான நேரடி அரச பேருந்து சேவைகள் உண்டு. திருக்கோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்து எடுப்பது சிரமமாக இருந்தால் திருக்கோணமலையில் இருந்து குருநாகலிற்கோ அல்லது தம்புள்ளவிற்கோ பேருந்து எடுத்து அங்கிருந்து கொழும்பிற்குச் செல்லலாம். திருக்கோணமலையில் இருந்து நேரடியாக் கொழும்பு செல்லும் பேருந்து இலக்கம் 49 ஆகும்.[தொகு] திருக்கோணமலை - வவுனியா
அரச பேருந்து சேவையானது காலை 7:00மணி, மாலை 1:30 மணியளவில் திருக்கோணமலையில் இருந்து வவுனியா நோக்கி இடம்பெறுகின்றது. திருக்கோணமலையிற்கும் வவுனியாவிற்கு இடையில் 15 சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளது. இதில் ஏறி இறங்குவதற்கு ஏறத்தாழ 3 மணித்தியாலங்கள் தேவைப்படுவதால் மொத்தப் பயணநேரம் தற்போது இருமடங்காகியுள்ளது (தற்போது 6 மணித்தியாலங்கள்).[தொகு] தனியார் வாகனங்கள்
அக்டோபர் 24, 2006 முதல் திருக்கோணமலையை விட்டு நீங்கு தனியார் வாகனங்கள் 85 ஆம் மைல் கட்டையில் பதிவினை மேற்கொண்டு அங்கு 4 விண்ணப்பங்களைப் பெற்று 3 இனைத் திருகோணமலை மாவட்டத்திலும் மற்றைய 1 ஐ திருக்கோணமலை மாவட்டத்திற்குத் திரும்பி வரும் போது மீளச் சமர்ப்பித்தல் வேண்டும். வவுனியா நோக்கிப் புறப்படும் வாகனங்கள் மொறவேவா சோதனைச் சாவடியில் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.[தொகு] பாதுகாப்பு
திருக்கோணமலையில் இலங்கை இராணுவம், இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை ஆகியவற்றுடன் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகங்களும் 2002 காலப்பகுதியில் இருந்தன. ஆயினும் யுத்தம் ஆரம்பித்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளில் அலுவலகங்கள் மூடப்பட்டன. திருக்கோணமலையில் விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது பெருமளவில் இருந்த போதிலும் இப்போது அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இந்த மாவட்டத்தில் இப்போது இல்லை. பெரும்பாலான விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவடத்திலும் தொப்பிகலப் பகுதிகளிலும் தற்போதுள்ளனர் எனக் கருதப்படுகின்றது.[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- திருகோணமலை பட்டினமும் சூழலும்
- திருக்கோணேச்சரம்
- திருகோணமலை கோட்டை
- நிலாவெளி கடற்கரை
- சம்பூர்
- கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
- கன்னியா வெந்நீர் ஊற்று
- ஸ்ரீ ஹரி நவசக்தி நாகம்மன் ஆலயம்
[தொகு] மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ திருக்கோணமலை (தமிழ் இலக்கணப்படி ஒரு க் மிகவேண்டும். மிக அண்மைக்காலம் வரையிலும் திருக்கோணமலை என்றே வழங்கிவந்தது. பிறமொழியாக்கங்கள் இதற்கு சான்று.
- திருக்கோணமலை முத்துக்குமாரசுவாமி கோயில்.JPG
0 கருத்துகள்:
கருத்துரையிடுக