கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும்.
இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டினத்துடன் வணிகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமீய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
கஜபாகு மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி 171 -193) மட்டக்களப்பு பகுதிகளுக்கு கண்ணகி வழிபாடுக்கு வந்ததாகவும் அதன் பின் இலங்கையின் வெவ்வேறு ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் ஆட்சி பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை பரப்பியதாக வரலாற்று குறிப்புகளுண்டு. மேலும் இவ்வழிபாடு முல்லைத்தீவிலிருந்து கடல்மார்க்கமாக மட்டக்களப்பு பகுதிகளுக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு.
கி.பி 1626ல் கண்டி மன்னன் செனரதன மலேய வீரர்களின் உதவியுடன் போர்த்துக்கேயரை மட்டக்களப்பில் இருந்து அகற்றி மலாய வீரர்களை காவலுக்கு வைத்தான். அக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் நாடார் குடியேற்றம் நடந்தது. யாழ் குடாநாட்டிலிருந்து கந்தப்பர் என்பவரது தலைமையில் புலம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் ஏழு கண்ணகி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்து வந்து பிரதிட்டை செய்து வணங்கத் தொடங்கினரென மட்டகிளப்பு மான்மியம் கூறுகின்றது.
[
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும்.
[தொகு] வரலாறு
கி.மு 5ம் நூற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதி திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நூற்றாண்டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது.இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டினத்துடன் வணிகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமீய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
கஜபாகு மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி 171 -193) மட்டக்களப்பு பகுதிகளுக்கு கண்ணகி வழிபாடுக்கு வந்ததாகவும் அதன் பின் இலங்கையின் வெவ்வேறு ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் ஆட்சி பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை பரப்பியதாக வரலாற்று குறிப்புகளுண்டு. மேலும் இவ்வழிபாடு முல்லைத்தீவிலிருந்து கடல்மார்க்கமாக மட்டக்களப்பு பகுதிகளுக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு.
கி.பி 1626ல் கண்டி மன்னன் செனரதன மலேய வீரர்களின் உதவியுடன் போர்த்துக்கேயரை மட்டக்களப்பில் இருந்து அகற்றி மலாய வீரர்களை காவலுக்கு வைத்தான். அக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் நாடார் குடியேற்றம் நடந்தது. யாழ் குடாநாட்டிலிருந்து கந்தப்பர் என்பவரது தலைமையில் புலம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் ஏழு கண்ணகி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்து வந்து பிரதிட்டை செய்து வணங்கத் தொடங்கினரென மட்டகிளப்பு மான்மியம் கூறுகின்றது.
கி.பி 159ஜ -180ஜ வரையுள்ள கண்டி மன்னர்களினது காலத்தில் தம்பிலுவில் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்ததுக்கு இலக்கிய தொல்லியல் சான்றுகள் உண்டு. சிங்கள அரசர்களும் நாயக்கர் வம்ச கண்டி மன்னர்களும் கண்ணகி வழிபாட்டனை ஆதரித்து மானியங்கள் பல வழங்கி வந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக