சில Facebook மற்றும் Twitter உள்ளடக்கங்களை தேசியத் தொழிநுட்ப ஆய்வு நிறுவனம் ஏற்கனவே கண்காணித்துவருகின்றது என புது டில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தொலைத்தொடர்புத் திணைக்களத்திற்கு உள்துறையமைச்சினால் விடுக்கப்பட்ட ஓர் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே இத்தகவல் வெளிவந்துள்ளது.
அத்தகவலில் ‘Facebook மற்றும் Twitter இனைக் கண்காணிக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்’ என்றிருந்தது.
இதிலிருந்து அரசாங்கம் இவற்றின் பக்கங்களை மட்டுமல்லாது நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு கருத்துக்களையும் கண்காணிக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்துறையமைச்சின் அறிவுத்தலானது சமூக வலையமைப்புத் தளங்களிலுள்ள எல்லாத் தரவுகளையும் பெறுமாறு DoT எனும் பரிமாற்றத் திணைக்களத்திடம் கேட்டதாக ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மறைமுக வேவுச் செயற்பாடுகள் எந்தவிதப் பயனுமற்றதென சர்வதேச வலையமைப்பு மற்றும் சமூக மையத்தின் நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டார்.
சாட்சிகள் இருந்தால் மட்டுமே இவ்வாறான கண்காணிப்பைச் செய்யவேண்டும் என கூறிய அவர் இவ்வாறு ஒவ்வொரு ‘Facebook மற்றும் Twitter பக்கங்களிலுள்ள பயனாளர்களின் பரிமாறல்களைக் கண்காணிப்பதாயின் அது அரசிற்குப் பணவிரயத்தினையும் மூலவிரயங்களையுமே ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு முக்கியமான விடயங்களில் அரசு கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் மக்களுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சில ‘Facebook மற்றும் Twitter உள்ளடக்கங்கள் ஏற்கனவே தேசிய தொழிநுட்ட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் மிலின்ட் டியோரா உறுதிப்படுத்தியுள்ளார்.
‘Facebook மற்றும் Twitter ஆகியவை தனிப்பட்ட தகவல்களை நீதிமன்ற அனுமதியின்றித் தமது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதில்லை.
அத்துடன் Twitter யார் யாரது தகவல்கள் பாதுகாப்பு முகவராலயங்களுடன் பகிரப்பட்டுள்ளன என்ற தகவலைக் காட்டும் தன்மை கொண்டது.
இந்தியா அண்மைய மாதங்களில் சர்வதேச வலையமைப்புக்களிலிருந்தும் Research In Motion போன்ற நிறுவனங்களிடமிருந்தும் தரவுகளைப் பெறும் வழிமுறைகளைப் பெற்றுள்ளது.
BlackBerry கைத்தொலைபேசிகளை விற்கும் இதுபோன்ற நிறுவனங்கள் மின்னஞ்சல்களையும் தகவல்களையும் மாற்றக்கூடிய தன்மையுள்ளவை.
உலகெங்கிலுமுள்ள சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கின்றன.
எனினும் அவை பெரும்பாலும் தெரிவுசெய்தே செயற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களின் முன்னர் பென்ரகன், தான் Twitter போன்ற தளங்களைக் கண்காணிப்பதாகவும் அரேபியப் பகுதிகளில் காணப்படும் புரட்சிகளையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் கண்டறியவே இதனைச் செய்வதாகவும் கூறியிருந்தது.
Darpa எனும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆய்வுப் பிரிவானது, தான் சமூக வலையமைப்புக்களைக் கண்காணிப்பதற்காக 42 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக