RSS
ஆலய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கௌரிக் காப்பு தோத்திரம்

ammbal


தேவி துணை
ஓம் சக்தி

காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே

காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்

சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளிதாயே

கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே

சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்

பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்

அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்

விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!

ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா

காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே

காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்

சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா

காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்

பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி

சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை

இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு

பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர

ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்

திருச்சிற்றம்பலம்


இவ்விரதத்தின் போது தினமும் லிங்காஷ்டகம் படித்தல் அவசியம்
லிங்காஷ்டகம்
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

தேவாரம்
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
- திருஞானசம்பந்தர்
சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.


துர்க்கை அம்பாள் போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி   4.

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி           8.

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி              12.

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி            16.

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி       20.

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி            24.

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி             28.

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி             32.

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி             36.

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி         40.

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி              44.

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி           48.

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி  52.

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி         56.

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி                60.

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி           64.

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி           68.

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி         72.

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி              76.

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி          80.

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி                   84.

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி        88.

ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி   92.

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி                 96.

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி         100.

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி         104.

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி             108.


மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப் பெற்றிருக்கும் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்:

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி        10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி        20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி    30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி    40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி    50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி    60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி    70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி    80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி    90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி    100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி    108.


மேல் மருவத்தூர் அம்பிகையின் 108 போற்றிகள்

ஓம் ஓம்சக்தியே             போற்றி ஓம்
ஓம் ஓங்கார ஆனந்தியே        போற்றி ஓம்
ஓம் உலக நாயகியே            போற்றி ஓம்
ஓம் உறவுக்கும் உறவானவளே    போற்றி ஓம்
ஓம் உள்ளமலர் உவந்தவளே        போற்றி ஓம்
ஓம் ஓதரிய பெரும் பொருளே        போற்றி ஓம்
ஓம் உண்மைப் பரம் பொருளே    போற்றி ஓம்
ஓம் உயிராய் நின்றவளே        போற்றி ஓம்
ஓம் மருவத்தூர் அமர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் மனமாசைத் துடைப்பாய்        போற்றி ஓம்        10.

ஓம் கவலை தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் ககனவெளி ஆனாய்        போற்றி ஓம்
ஓம் புற்றாகி வந்தவளேஓம்        போற்றி ஓம்
ஓம் பாலாகி வடிந்தவளே        போற்றி ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய்        போற்றி ஓம்
ஓம் பண்ணாக இசைந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாமலர் உவந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாம்புரு ஆனாய்            போற்றி ஓம்
ஓம் சித்துரு அமைந்தாய்        போற்றி ஓம்
ஓம் செம்பொருள் நீயே        போற்றி ஓம்        20.

ஓம் சக்தியே தாயே            போற்றி ஓம்
ஓம் சன்மார்க்க நெறியே        போற்றி ஓம்
ஓம் சமதர்ம  விருந்தே        போற்றி ஓம்
ஓம் ஓங்கார உருவே            போற்றி ஓம்
ஓம் ஒருதவத்துக் குடையாய்        போற்றி ஓம்
ஓம் நீள்பசி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் நின்மதி தருவாய்            போற்றி ஓம்
ஓம் அகிலமே ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் அண்டமே விரிந்தாய்        போற்றி ஓம்
ஓம் ஆன்மீகச் செல்வமே        போற்றி ஓம்        30.

ஓம் அனலாக ஆனாய்            போற்றி ஓம்
ஓம் நீராக நிறைந்தாய்            போற்றி ஓம்
ஓம் நிலனாகத் திணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தூறாக வளர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் துணிபொருள் நீயே        போற்றி ஓம்
ஓம் காராக வருவாய்            போற்றி ஓம்
ஓம் கனியான மனமே            போற்றி ஓம்
ஓம் மூலமே முதலே            போற்றி ஓம்
ஓம் முனைச்சுழி விழியே        போற்றி ஓம்
ஓம் வீணையே இசையே        போற்றி ஓம்        40.

ஓம் விரைமலர் அணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவங் கடந்தாய்        போற்றி ஓம்
ஓம் சகலமறைப் பொருளே        போற்றி ஓம்
ஓம் உத்தமி ஆனாய்            போற்றி ஓம்
ஓம் உயிர்மொழிக் குருவே        போற்றி ஓம்
ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் நீள் நிலத் தெய்வமே        போற்றி ஓம்
ஓம் துரிய நிலையே            போற்றி ஓம்
ஓம் துரிய தீத வைப்பே        போற்றி ஓம்
ஓம் ஆயிர இதழ் உறைவாய்        போற்றி ஓம்        50.

ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய்    போற்றி ஓம்
ஓம் கருவான மூலம்            போற்றி ஓம்
ஓம் உருவான கோலம்        போற்றி ஓம்
ஓம் சாந்தமே உருவாய்        போற்றி ஓம்
ஓம் சரித்திரம் மறைத்தாய்        போற்றி ஓம்
ஓம் சின்முத்திரை தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் சினத்தை வேரறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கையிரண்டு உடையாய்        போற்றி ஓம்
ஓம் கரைபுரண்ட கருணை        போற்றி ஓம்
ஓம் மொட்டுடைக் கரத்தாய்        போற்றி ஓம்        60.

ஓம் மோனநல் தவத்தாய்        போற்றி ஓம்
ஓம் யோகநல் உருவே            போற்றி ஓம்
ஓம் ஒளியன ஆனாய்            போற்றி ஓம்
ஓம் எந்திரத் திருவே            போற்றி ஓம்
ஓம் மந்திரத் தாயே            போற்றி ஓம்
ஓம் பிணி தவிர்த்திடுவாய்        போற்றி ஓம்
ஓம் பிறவிநோய் அறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் மாயவன் தங்கையே        போற்றி ஓம்
ஓம் சேயவன் தாயே            போற்றி ஓம்
ஓம் திரிபுரத்தாளே            போற்றி ஓம்        70.

ஓம் ஒருதவம் தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் வேம்பினை ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் வினையெலாம் தீர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் அஞ்சனம் அருள்வாய்        போற்றி ஓம்
ஓம் ஆருயிர் மருந்தே            போற்றி ஓம்
ஓம் கண்ணொளி காப்பாய்        போற்றி ஓம்
ஓம் கருத்தொளி தருவாய்        போற்றி ஓம்
ஓம் அருளொளி செய்வாய்        போற்றி ஓம்
ஓம் அன்பொளி கொடுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கனவிலே வருவாய்        போற்றி ஓம்        80.

ஓம் கருத்திலே நுழைவாய்        போற்றி ஓம்
ஓம் மக்கலைக் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனநோயைத் தவிர்ப்பாய்    போற்றி ஓம்   
ஓம் எத்திசையும் ஆனாய்        போற்றி ஓம்
ஓம் இதயமாம் வீணை            போற்றி ஓம்
ஓம் உருக்கமே ஒளியே        போற்றி ஓம்
ஓம் உள்ளுறை விருந்தே        போற்றி ஓம்
ஓம் மலப்பிணி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனங்கனிந்து அருள்வாய்    போற்றி ஓம்
ஓம் நாதமே நலமே            போற்றி ஓம்        90.

ஓம் நளின மலர் அமர்வாய்        போற்றி ஓம்
ஓம் ஒற்றுமை சொல்வாய்        போற்றி ஓம்
ஓம் உயர்நெறி தருவாய்        போற்றி ஓம்   
ஓம் நித்தமும் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் நேரமும் ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் பத்தினி பணிந்தோம்        போற்றி ஓம்
ஓம் பாரமே உனகே            போற்றி ஓம்
ஓம் வித்தையே விளக்கே        போற்றி ஓம்
ஓம் விந்தையே தாயே            போற்றி ஓம்
ஓம் ஏழையர் அன்னை            போற்றி ஓம்        100.

ஓம் ஏங்குவோர் துணையே        போற்றி ஓம்
ஓம் காலனைப் பகைத்தாய்        போற்றி ஓம்
ஓம் கண்மணி ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் சத்தியப் பொருளே        போற்றி ஓம்
ஓம் சங்கடந் தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவச் சுரங்கமே        போற்றி ஓம்
ஓம் தாய்மையின் விளக்கமே        போற்றி ஓம்
ஓம் ஆறாதார நிலையே        போற்றி ஓம்        108.

ஓம் சக்தி ஓம்     சக்தி ஓம்    சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்    சக்தி ஓம்    சக்தி ஓம்
ஓம்    ஓம்    ஓம்


அம்பிகையின் பாடல்கள்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பாடல்கள்

பாடல்  -  1               

இராகம்:  பாகேசி                தாளம்:  ஆதி
பல்லவி
பணிசெய் பத்தர்கள் போற்றிப் பரவுமிடம்
பணிப்புல நற்பதியே ஸ்ரீ முத்துமாரியை
(பணி......)

அனுபல்லவி
பிணிகளைத் தீர்க்கும் பெம்மான் இறைவியை
மணியொலி நாதத்தில் மங்களத்துதிபாடும்
(பணி......)

சரணம்  1
வேதங்கள் ஒலித்திட வேண்டும் வரந்தரும்
நாதசொ ரூபியை நாரணி காளியை
பாதது திசெது பாடிப்ப ரவிநின்று
ஓதும்ம றைகளின் உட்பொருளை உணர்த்த
(பணி......)

சரணம்  2
ஆடிப் பூரத்தில் அன்னையைப் போற்றிசெய்து
கூடிக் கொலுவிருத்தி குங்குமப் பொட்டுமிட்டு
ஆடியும் பாடியும் ஆரத்திகள் எடுத்தும்
நாடிடும் பத்தருக்கு ந்ல்லமுதுந் தரும்
(பணி......)

பாடல்  -  2

இராகம்:  நடைபைரவி        தாளம்:  ஆதி
பல்லவி
பாணர் பணிந்தேத்த பரமப தம் அருளும்
பணிப்பு லத்து நாயகியே உமையே -  யாழ்ப்

அனுபல்லவி
வானவர் தானவர் வலம்வந்து மலர்சொரிய
ஞானநடம்புரியும் ஆரணி நீ பூரணி நீ

சரணம்  1
கவினுறு கீதங்கள் களிப்புடன் பாடிட
புவியிலுள் ளோர்க்கருளும் புராதனி நீ - என்
நாவில் நடம் புரிந்து நற்றமிழ்ப் பண்பாடும்
பாவினால் நிதந்துதிக்க வரமருள்வாய்

சரணம்  2
பத்தரும் சித்தரும் முத்தரும் போற்றிநின்று
நித்தியத் துதிபாடும் உந்தன் அழகை
எத்திசை சென்றாலும் எண்ணியே நான் பாட
சித்திகள் யாவும் தந்தே துணையிருப்பாய்

சரணம்  3
சத்திசிவ ரூபமாய் சகலரும் போற்றுகின்ற
முத்துமாரித் தாயாகி முன்நிற்பவளே  - நல்
வித்தைகள் நல்கியே சகலவளமும் தந்து
இத்தரணியில் சிறக்கும் இன்பம் தருவாய்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

2011 அன்று இடம்பெற்ற கொடியேற்ற திருவிழா

நலூர் கந்தன் தேர்த்திருவிழா 2011
தெற்கு வீதியில் அமைந்துள்ள புதிய கோபுரமருகே ஆரோகணிக்கும் காட்சி
அடியார்களின் பக்திக் கடலில் சித்திரத் தேரினில் மிதந்து  வரும்  நல்லைக் குமரன்.

'முருகா என்றழைக்கவா... முத்துக்குமரா என்றழைக்கவா...' எனப் பாடி புகழ்லேந்தப்படும் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் முருகப் பெருமான் இன்று தேர் ஏறிவருகின்றான்.

முருகன் என்றால்'அழகன்' என்று பொருள். நல்லூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தமிழ்க் கடவுளாக தமிழர்கள் செறிந்து வாழும் வடபகுதியில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றான்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இன்று 27 ஆம் திகதி தேர்த்
திருவிழா. உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களையும் துயரங்களையும் இன்னல்களையும் இடுக்கண்களையும் நீக்கியருளும் பொருட்டு இந்த நல்லூரிலே கோயில்கொண்டு எழுந்தருளி வீற்றிருக்கின்றான்.

புனித நகராம் நல்லூரிலே அருள்பாலிக்கும் அழகன் முருகப்பெருமானுக்கு நடைபெறுகின்ற வருடாந்த மஹோற்சவத்திலே ரதோற்சவம் சிறந்ததொன்றாகும். சிவ பெருமானுடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளாக உருவெடுத்து சரணவணபொய்கையிலே ஆறு குழந்தைகளாக வந்து உமையவளால் ஆறுமுகங்களோடு இந்த உலகம் உய்ய உதித்தவன் முருகன்.

சிவபெருமானுக்கும் முருகனுக்கும் பேதமில்லை. இருவரும் ஒன்று தான். ஆதலின் 'நமது சக்தி ஆறுமுகன்' என்கிறது கந்தபுராணம். ஆகவே சிவபெருமான் தான் சூரபத்மனாதியோரை அழித்து தேவர்களைக் காக்கும் ஆறுமுகக்கடவுளாக அவதரித்து அருள்பாலித்துள்ளார்.
அத்தகைய அருள் நிறைந்த முருகப்பெருமான் இன்று நல்லூரில் இரதோற்சவத்தில் ஆரோகணிக்கின்றார். புனித நகராம் அருள்கொழிக்கும் இந்த நல்லூர்ப்பதியில் சரித்திரப் பெருமை வாய்ந்த சிறப்புமிகு தலமாகும். சைவமும் தமிழும் தழைத்தோங்கிவளரத் தம்மையே அர்ப்பணித்தவரான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்த இடமான இந்த நல்லூர் சங்கிலியன் ஆட்சியில் இராசதானியாக இருந்திருக்கின்றது. அவனுடைய ஆட்சியிலே இந்த நல்லூர் பீடும் பெருமையும் கொண்டு மிக்க சிறப்புடன் விளங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.

இத்தகைய இந்த நல்லூர் முருகன் கோவில் கொண்டு அருள்பாலிக்கின்ற தலமாக விளங்குவது தமிழ் மக்களுக்கெல்லாம் மிகுந்த பெருமையை அளிக்கின்றது. தமிழ்பேசம் மக்களின் தருப்பெரும்தெய்வமான தமிழ்க்கடவுள் முருகனுக்கு கோலாகலமாகத் தேர்த்திருவிழா நடைபெறுகின்றது.
அழகன் முருகன் ஆறுமுகப்பெருமானாக அழகிய சித்திரத்தேரில் ஆரோகணித்து வருகின்ற அருட்காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அடியார் பெருமக்களாகிய ஜன சமுத்திரத்தின் நடுவே தங்கரதம் ஆடி அசைந்து வருகின்ற போது ''அரோகரா... முருகனுக்கு அரோகரா'' என்று கோஷமிடுகின்ற அடியவரைச் சொல்லவா! அழகன் முருகன் ஷண்முகப் பெருமானாக ஸ்ரீவள்ளி தேவசேனாதிபதியாக எழுந்தருளித் தேரில் வருகின்ற அருட்பவணி பற்றிச் சொல்லவா!

எங்கு திரும்பினாலும் அடியார் கூட்டம். ''முருகா! முருகா!'' என்று கூறிய வண்ணம் தேரில் வருகின்ற முருகனை ஒரு கணம் நேரில் தரிசித்திட வேண்டும் என்ற அவாவுடன் முண்டியடித்துக் கொண்டு முருகனின் தேரை நோக்கிப் படையெடுக்கின்றார்.

இன்னொரு புறம் முருகனுடைய நாமங்களை உச்சரித்தபடி பஜனைக்கோஷ்டிகள் வந்துகொண்டிருக்கின்றன. காவடிகள் தூக்கிவரும் அடியவர்கள் ஆடிப்பாடிக்கொண்டு வருகின்றனர். தேரின் பின்னே அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்கள் நீண்ட வரிசையிலே உருண்டு வருகின்ற இப்படியான பக்திமயமான தெய்வீகக்காட்சி வேறு எங்குமே காண முடியாது.

தேர்வடம் பிடித்து இழுத்து வருகின்ற அடியார்களின் பக்திமயமான கோஷம் வானைப்பிளக்கும் நல்லூர் முருகனின் தேர்வடம் பிடித்திழுத்தால் சொர்க்கத்திலே ஓரிடம் பிடிக்கலாம் என்று இடித்துத்தள்ளிக்கொண்டு வரும் அடியவர் முகங்களில் எத்தனை பிரகாசம்.

இன்று நல்லூரிலே காணுகின்ற காட்சிகள் யாவும் பக்திமயமானவை. ஷண்முகப்பெருமானுடைய அழகுத் தோற்றத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் அடியார் கூட்டம் அலை மோதுகின்றது. தூக்குக் காவடிகள் பல முருகனின் வீதிகள் தோறும் வந்து கொண்டிருக்கின்றன.பெண் அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் பாற்காவடி எடுத்தும் அடியழித்தும் தமது நேர்த்திகடன்களையெல்லாம் பூர்த்தி செய்கின்றனர்.

முருகனின் தேர் திருவிழா வீதிவலம் வந்து இருப்பிடத்தைச் சேர்ந்ததும் உடனே பச்சை சாத்தி பச்சை வண்ணம் காட்ட தேரினின்றும் இறங்கி ஆரோகணித்து வருகின்ற அற்புதக்காட்சி காணக் கண் கோடி வேண்டும். ஆறுமுகனின் அழகு வார்த்தையில் அடங்காது. அழகே ஓருருவெடுத்தாற் போன்று வரும் முருகனின் அழகுத் திருக்கோலம் தெவிட்டாதினிக்கும் தெய்வீகக் காட்சி. இன்று விழாக்கோலம் பூண்டிருக்கும் நல்லைக்கந்தன் ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வழிபாடாற்றிட பூர்வஜென்ம புண்ணியஞ் செய்திருக்க வேண்டும்.

தொல்லை வினை தீர்க்கும் நல்லைக் கந்தனைத் தரிசித்துப் பிறவி எடுத்ததன் பயனை பெற்றுய்வோமாக.

நன்றி: சிவநெறிக்கலாநிதி இராசையா ஸ்ரீதரன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

vavuniya temples

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

வவுனியா சித்தி விநாயகர் கோவில்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

இழுப்பைமூலை பிள்ளையார் கோவில் பொலிகண்டி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

வல்லிபுர ஆழ்வார் கோவில், பருத்தித்துறை

வல்லிபுர ஆழ்வார் கோவில் ஈழத்தின் பிரபலமான இந்து ஆலயங்களில் ஒன்று. பருத்தித்துறையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தென்கிழக்காக வடமராட்சி கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை வழியில் நெய்தல் பாங்கான இடத்தில் விசாலமான நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சக்கரமே திருமாலின் சின்னமாக வழிபடப்படுவதனால் சக்கரத்தாழ்வார் என்றும் அறியப்படுகின்றார். யாழ்ப்பணத்தில் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருவிழாக்களில் ஒன்றாக வல்லிபுர ஆழ்வார் கோவில் உற்சவம் விளங்குகின்றது. குறிப்பாக தேர் மற்றும் கடல் தீர்த்தம் என்பவை பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்களை ஒன்றுகூட வைக்கும்.

வல்லிபுர ஆழ்வார் கோவிலின் இராஜகோபுரம்

ஆலயம் அமைந்திருக்கும் சூழலில் காணப்படும் நாமக்குளம் (திருமண் எடுக்கப்படும் இடம்), அரிய கிளைகளுடன் கூடிய கற்பகதருக்கள் என்பவை இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புக்களில்சிலவாகும்.

கிளைகளுடன் கற்பகதருக்கள்
இவ் ஆலயம் அமைந்திருக்கும் அமைவிடமானது மிகவும் மனதிற்கு ஒரு அமைதியை கொடுக்கும் இடமாக உள்ளது.       **எதுவும் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

முறிகண்டிப் பிள்ளையார் கோவில், வன்னி

இவ் ஆலயம் வடபகுதியின் நெடுஞ்சாலையான a9 வீதியில் அமைந்துள்ளது.இதனால் இவ் வழியால் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் ஆலயத்தை தரிசித்துவிட்டு தமது பயணத்தை தொடர்வார்கள்.அத்துடன் இவ் ஆலய சூழல்களில் காணப்படும் கடைகளும் மிகவும்  பிரசித்தமானவை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

வல்லை முனியப்பர் கோவில் உங்களை வரவேற்கின்றது.


யாழ் கடனீரேரியானது யாழ் தீபகற்பத்தினை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று தனித்து நிற்கும் நிலப்பரப்புக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் (B71) வீதி ஊடறுத்துச் செல்லும் கடனீரேரிப் பகுதியான வல்லைவெளி வரட்சியான பரந்ததொரு வெளியாகும். அந்த வெளியின் மத்தியில் இருக்கும் ஒரேயொரு பெருமரமும் அதன் கீழிருக்கும் வல்லை முனியப்பர் கோவிலும் அவ்வழியால் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும்.அதேநேரம் இவ்வாலயம் மிகவும் புராதன ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

Bell Towers of Hindu Temples of Jaffna - An influence of Christian Churches?

Hindu Temples of Jaffna

There had been Hindu temples in Jaffna the northern region of Sri Lanka, for several centuries. However, when Portuguese captured Jaffna in 1620 AD, all temples existed at that time, without any exception had been demolished. Although, Potuguese rule lasted only 38 years, people could not build any themples, as the Duch who suceded Portuguese too did not allow to practice any relegions other than their own. It took about 175 years to build the first temple after 1620.
Towards the end of Dutch rule in Jaffna around 1796, they relaxed their policy and a few Hindu themples have been built. Although the basic temple buildings conform to the religious texts and very similar to the ones in Tamilnadu of India, from where most of the Jaffna population could have come in the remote past, Jaffna themples have a few regional characters. One of these characters which is absent in Tamilnadu temples is the Bell Tower.
One cannot see a proper Bell Tower in Tamilnadu temples. However, almost all temples of reasonable size in Jaffna cosist of a bell tower as an important feature. The first two photos show this difference.
A Hindu Temle and a Church in Jaffna. Note the Bell Towers in both the buildings.

Jaffna Temples and Churches.

Pictures found below show bell towers in Temples and churches of Jaffna. Similarities are clearly visible. However, what is not clear is, how the traditional arhitects or Stapatis as called by Hindus, managed to include this feature, which is not described in religious texts related to Temple Architecture, in their design.
A Church in Jaffna with free standing Bell Tower.
A Hindu Temple in Inuvil Compare the Bell Tower with previous photograph of the Church

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

Trincomalee in Legend and History


Aerial view of Swami Rock with Koneswaram Temple, Trincomalee.
Bird's eye view of Swami Rock, Trincomalee
map of Trincomalee and surroundings
Trincomalee and surroundings
view of Koneswaram Temple, Trincomalee.
The site of the ancient Tiru Koneswaram Temple upon Swami Rock, Trincomalee. Modern-day Tiru Koneswaram Temple may be seen in the background.

Renowned in legend and history, by a variety of names—Kōna Malai, Kōnā Malai, Tiru Kōna Malai — Trincomalee is the site of the “Sacred Hill of the Three Temples.” Situated on the eastern seaboard, the place finds mention in the Mahavamsa by the name of Gōkarna, the Sanskrit and Pali form of the Tamil KONa or Sinhalese GOna.

The Story of the Holy Hindu Shrine

On the summit of the Rock, known as the Swami Rock or the Three Swami Rock, was the “temple of unusual size and splendor, renowned through the whole of India,” the temple which was razed to the ground and despoiled by the Portuguese in 1624. Tirujnana Sambandar the Saivite saint of the 7th century AD features the temple in his devotional hymns. This is the earliest reference to the temple, which in point of time goes back to a far distant epoch.
The Pallavas of South India had considerable influence over the region, in the time specifically of the King of Ceylon, Manavanna (668—703 AD), as we learn from the Sanskrit inscriptions at Tiriyayi, 29 miles north of Trincomalee. From this and other related accounts, it is reasonable to conclude that the Pallava kings bestowed much attention to the temple dedicated to Koneswara and enlarged it considerably. From references to the “Thousand Pillared Mandapam,” it was obviously a shrine of magnificent proportions.
The Chola and Pandyan kings maintained the traditions of royal patronage. The inscriptions at the archway of Fort Frederick with the insignia of the double fish symbolism of the Pandyan kings, are eloquent of the Pandyan connections ascribed to the 13th century.
How the shrine fared at the hands of the Portuguese, and what happened thereafter, are matters of history. A good summary of the events, is what is contained in the pages of Tennent:
“In the earlier portion of their career in Ceylon the Portuguese showed the utmost indifference to the possession of Trincomalee; but after the appearance of the Dutch on the coast and the conclusion of an alliance between them and the Emperor of Kandy, Constantine de Sa, in 1622 alarmed at the possibility of these dangerous rivals forming establishments in the Island, took possession of the two ports of Batticaloa and Trincomalee, and ruthlessly demolished the “Temple of a Thousand Columns,” in order to employ its material in fortifying the heights on which it stood. Some of the idols were rescued from this desecration, and conveyed to the Pagoda of Tamblegam; but fragments of carved stone-work and slab bearing inscriptions in ancient character, are still to be discerned in the walls of the Fort, and on the platform for the guns.
The scene of this sacrilege is still held in the profoundest veneration by the Hindus. Once in each year, a procession, attended by crowds of devotees, who bring offering of fruits and flowers, repairs, at sunset, to a spot where the rock projects above the ocean—a series of ceremonies is performed, including the mysterious breaking of a cocoanut against the cliff; and the officiating Brahmin concludes his invocation by elevating a brazen censer above his head filled with inflammable materials, the light of which, as it burns, is reflected far over the sea.” (Tennent’s Ceylon, Vol. II, pp. 484-485).

Tirukoneswaram, circa 1935
Devotees gather at Tirukoneswaram sacred site, circa 1935

Recent Discoveries

The destruction was so overwhelming that objects hurriedly hidden, or submerged under the debris or consigned to the sea, continue to be revealed from time to time. Among such are the three images discovered on a day in July, 1950—Siva as Chandrasekhara, Siva as Somaskanda, and Parvati. These with the four figures discovered earlier, including figures of Ganesa and Parvati seated, make a total of seven images. Undersea explorers have recently taken submarine photographs of the place, and incidentally discovered the remains of the ancient Hindu temple deep down near the seabed.
The temple is now in process of reconstruction, after a lapse of some 380 years following its destruction. A number of structures have already come up and the work is proceeding.

Buddhist Reminiscences

Trincomalee and its environs are sacred to the Buddhist as to the Hindu. Tiriyayi 29 miles north of Trincomalee is a place of Buddhist interest. Here has been discovered the ruins of an ancient Buddhist monastery, with the standing structure of a vatadage, an architectural type, distinctively Sinhalese, occupying an area of about an acre in extent. In the centre of the premises is the ruined stupa. Below the hill extends to the East, the blue sea—the Bay of Bengal and an unbroken stretch of forest on all the other sides. A Sanskrit inscription on a rock gives the name of the shrine, the Giri Kandi Caitiya. The shrine is of great value to the Buddhists, for within it is believed to have reposed the very first relics of the Buddha. At the four entrances to the shrine are moonstones of high artistic merit. Among the other striking features are the guard stones of the makara and the naga.

The Harbor

To begin with features sacred, is not to belittle or depreciate the other manifold fascinations of Trincomalee. Nature has endowed the region with a beauty and grace that has not been excelled by man. No doubt, man here has enriched Nature’s gifts, so much so, that Trincomalee today is a product of both aspects harmoniously blended.
Its importance as a place of strategic consequence guided its destinies in modern times. The great European powers vied with one another for the mastery of the harbor. The Portuguese, the Dutch, the French and the English, each held it in turn, and many a sea fight was staged off the cliffs of Trincomalee. Of all harbors in the East, it can be said that it is largely today as Nature endowed it.
Commanding the finest view in all the station, are the terraced high lands overlooking the harbor—the site on the eminence of which stands the most commodious and attractive of the hotels of the place, the Welcombe Hotel. Below stretches in all its splendor the placid waters of the harbor, with but the gentlest of ripples playing over its surface as the soft wind blows over its wide expanse. To all appearance, more a lake set in natural surroundings, than an inlet of the sea, the view of the harbor from the terraced premises of the hotel is a sight most refreshing, physically and mentally. Guarding the entrance to the harbor are the pair of projecting headlines, much as the twin figures of dwarapalas at the entrance to one of the temples of Anuradhapura. It is the temple of Nature that these headlines safeguard. Far away in the distant horizon is a thickly wooded strip of land which “connects the landscape with the quiet of the sky.”
Irregular in outline all around as Nature made it, this enhances the charm of its setting. A carriage road winds along the northern and eastern sections of the harbor.
The situation of Trincomalee in an environment comparatively less developed and sparsely populated, has been a handicap in the past ages, to its advancement. Nevertheless plans to develop Trincomalee as a commercial seaport are under way. These hold forth rich promise of brighter days. Its gifts as a natural harbor may ere long bear fruit, as a commercial port of immense consequence to the economy of Ceylon.
Kanniyayi hot springs, Trinco

The Hot Springs

Among the sights of the place are the seven hot springs of Kanniyayi, on the road to Trincomalee. About a mile on a side road branching from the main route, the springs are worth a visit. A high wall assembles all the seven springs in a rectangular enclosure. Each enclosed in a dwarf wall forms a well of its own. The water is mildly hot; the temperature varies but slightly in each. In effect, a public bathing resort, the use of the springs is controlled by the neighboring Mari Amman Kovil who holds the lease of the wells. The site of the springs is crown land.

See also Discovery of Ravana's swayambhu lingam
home

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

ஆஞ்சநேயருக்கு வடைமாலை ஏன்?

கோவில்களிலும், வீடுகளிலும் விசேஷ நாட்களின்போது சுவாமிக்கு வடை செய்து நைவேத்தியம் செய்வார்கள். அதேபோல், ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏன் அவருக்கு மட்டும் விசேஷமாக வடைமாலை சாற்றுகிறார்கள் தெரியுமா?

ராமாயணப் போர்க்களத்தில் அரக்கர்களை வடை தட்டுவதுபோல தட்டி சம்ஹாரம் செய்தவர் ஆஞ்சநேயர். அதை நினைவுபடுத்தும் வகையிலேயே அவருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. திருப்பதி போன்ற கோவில்களிலும் வடை நைவேத்தியம் செய்கிறார்கள்.

இந்த நிவேதன வடைகளை, அவை எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து, அதிக பருமன் இல்லாமல் பக்குவமாக தயார் செய்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வடை மாலையை இஷ்ட தெய்வங்களுக்கு சாத்துவதும் உண்டு. இந்த மாலையில் உள்ள வடைகள் கர கரவென்று இருக்கும். இதை உட்கொள்கிறவர்களுக்கு புத்தி பலம், தைரியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

துளசியை எந்த நாட்களில் பறிக்கக்கூடாது?

இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம்.

அந்தவகையில் வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.

இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசி பறிக்கலாம்.

மேலும், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும், இலைகளையும் பறிக்கும்போது பேசிக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது. அதுபோல கைகளை கீழே தொங்க விட்டவாறும் பறிக்கக் கூடாது.

அத்துடன் கையால் உடம்பையும், உடைகளையும் தொட்டவாறும், கொம்புள்ள கிளைகளை முறித்தலும் அப்போது செய்யக்கூடாது. நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி, அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானம்!

தானமும் பலன்களும்:

அட்சய திரிதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்யலாம். கோடை காலமாக இருப்பதால் நீர் மோர், பானகம் முதலியன கொடுக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ-மாணவிகளுக்கு `கல்வி' உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் விபரம் வருமாறு:-

1. அஸ்வினி- கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.

2. பரணி- நெய்தானம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம். பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.

4. ரோகிணி- பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

5. மிருக சீரிஷம்- சாம்பார் சாதம் தானம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.

6. திருவாதிரை- தயிர் சாதம் தானம். ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.

7. புனர்பூசம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

8. பூசம்- மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.

9. ஆயில்யம்- வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

10. மகம்- கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.

11. பூரம்- நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்கு உதவலாம்.

12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.

13. அஸ்தம்- பால் பாயாசம் தானம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.

14. சித்திரை- துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.

15. சுவாதி- உளுந்து வடை தானம். வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.

16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.

17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.

18. கேட்டை- வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.

19. மூலம்- கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு உதவலாம்.

20. பூராடம்- நெய் சாதம் தானம். ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.

21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.

22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.

23. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.

24. சதயம்- உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.

25. பூரட்டாதி- தயிர் சாதம் தானம்.

26. உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.

27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

அட்சய திருதியை தினத்தன்று என்ன நிற ஆடை அணியலாம்

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும், தங்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புப்படி நிறத்துக்கான உடையை தேர்வு செய்து அணிந்தால் பலன் கிடைக்கும். நட்சத்திரப்படி ஒவ்வொருவரும் அணிய வேண்டிய உடை நிறம் வருமாறு:-

1. அஸ்வினி- சாம்பல்

2. பரணி- வெள்ளை

3. கிருத்திகை- சிவப்பு

4. ரோகிணி- வெள்ளை

5. மிருகசீரிஷம்- செந்நிறம்

6. திருவாதிரை- கருப்பு

7. புனர்பூசம்- மஞ்சள்

8. பூசம்- நீலம்

9.ஆயில்யம்- பச்சை

10. மகம்- சாம்பல்

11. பூரம்- வெள்ளை

12. உத்திரம்- சிவப்பு

13. அஸ்தம்- வெள்ளை

14. சித்திரை- செந்நிறம்

15. சுவாதி- கருப்பு

16. விசாகம்- மஞ்சள்

17. அனுசம்- நீலம்

18. கேட்டை- பச்சை

19. மூலம்- சாம்பல்

20. பூராடம்- வெள்ளை

21. உத்திராடம்- சிவப்பு

22. திருவோணம்- வெள்ளை

23. அவிட்டம்- செந்நிறம்

24. சதயம்- கருப்பு

25. பூரட்டாதி- மஞ்சள்

26. உத்திராட்டதி- நீலம்

27. ரேவதி- பச்சை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

விரதம் இருப்பது எப்படி?

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

பங்குனி உத்திர விரதத்தை எப்படி மேற்கொள்வது?

ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப்பாடல்களை பாடலாம்.

அன்று முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.

மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

சனிவார விரதம் இருக்கும் முறைகள்

காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் திருஉருவப்படம் அல்லது திருஉருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.

விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை ஆவாஹனம் செய்ய வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம்.

பின்தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப்படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். இதுவே சனி வார விரதம் எனப்படும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

லட்சுமி குபேர விரதம்

அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். வெள்ளிக்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு சுத்தமான உடையை உடுத்தி நல்ல நேரத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதையெல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வைக்க வேண்டும்.

குபேரன் யந்த்ரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காம, சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும்.

அதன் நடுவில் ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையைச் செருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும்.

வெற்றிலை பாக்கு, பழம் எல்லாத்தையும் கலசத்துக்கு முன்பு வையுங்கள். மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிறகு படம், யந்த்ரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூ, மாலை போடவும் ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்த்ரம் ஸ்லோகங்களைக் கூறவும், பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனைப் பற்றிய ஸ்லோகம், மந்த்ரம், துதி ஆகியவற்றைக் கூறவும் எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப் படவேண்டாம்.

மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு தூப, தீபம் காட்டி வாழைப்பழம், பசும்பால் பாயசம் என்று உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம்.

வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும் தட்சணை பணத்தை ஏழைகளுக்கும் கொடுக்கவும். நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.

இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் எப்போழுது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

பாவங்கள் போக்கும் பங்குனி உத்திர விரதம்

தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும் பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது. இன்றைய நாளில் அதிகாலை நீராடி மனத் தூய்மையோடு விரதம் இருந்து அருகிலிருந்தும் ஆலயங்கள் சென்று தெய்வக் கல்யாணங்களை கண்டு தரிசிப்பதோடு வீட்டிலும் விரத பூஜைகள் செய்வது சிறப்பு.

* பங்குனி உத்திரத்தில் சிவ பார்வதி படத்தை அலகரித்து சிவபார்வதி கல்யாண மூர்த்தியாக பாவித்து வழிபாடு செய்தல் வேண்டும் குத்து விளக்கேற்றி வைத்து, தாம்பூலத்தோடு சித்ரான்னங்கள்,சர்க்கரைப் பொங்கலோடு நைவேந்தியம் படைத்து வழி பட வேண்டும். இன்றைய தினம் திரு விளக்கு தீபத்தில் சிவ பார்வதி இருவரும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே விளக்கு பூஜை செய்து நம்பாவங்கள் அகன்று மங்களம் கைகூடப் பெறலாம்.

* கந்தக் கடவுளுக்கும் உரிய திருநாள் ஆதலால் ஆலய தரிசனத்தோடு இல்ல வழிபாட்டின் போது சஷ்டிக் கவசம் சொல்லி முருகனையும் வழிபட்டுச் சிறக்கலாம்.

*ஸ்ரீ மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டித்துதான் ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாராம் எனவே இன்று விரதம் இருந்து பெருமானை பூஜித்து அடியவர்களும் மணப்பாக்கியம் பெறலாம்.

* மேலும் தேவேந்திரன்- இந்திராணி திருமணம். நான் முகன் கலைவாணி திருமணம் ஆகியவைகளும் இந்த பங்குனி உத்திரத்தின் பலனால் தான் நடை பெற்றனவாம். நாமும் இந்நாளில் விரதம் இருந்து தெய்வீக திருவருள் பெறுவோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

அருள்தரு சிவதர்மசாஸ்த்தா திருக்கோயில் (ஐயப்பன் கோயில்)

அருள்தரு சிவதர்மசாஸ்த்தா திருக்கோயில் (ஐயப்பன் கோயில்)
ஆலயத்தில் பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
தொடர்பு: 0094 21 3205050 / 0094 77 8453766 (பகல்) / 0094 77 8453766 (இரவு)
ஈமெயில் மூலமான தொடர்புகளுக்கு எனும் முகவரிக்கு ஈமெயில் செய்யவும்

அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு. சாட்டுபத்தூர் சபரிபீடம் அருள்வளர் சிவதர்ம சாஸ்த்தா தேவஸ்த்தானம்
மண்டலாபிஷேக பூர்த்தி வைபவ 108 கலச சங்காபிஷேக பெருதின விழா

ஜயன் அடியார்களே!
ஆடித் திங்கள் 13ம் நாள் 29.07.2011 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு 108 கலச சங்காபிஷேகம் திரவ்விய அபிஷேகம் திரவ்விய ஹோமம் 108குடம் பாலாபிஷேகம் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். (சக்தி பூசை) மாலை 03.00 மணிக்கு விஷேட பூசை திருவூஞ்சல் குதிரை வாகனத்தில் தெருவீதி வலம் வருதல் பிராயச்சித்த அபிஷேகம். இரவு 08.00 மணிக்கு ஹரிவராசனம்

“அனைவரும் வருக வருக என்று ஜயன் அழைக்கின்றான்”

தேவஸ்தான நித்திய குருசுவாமி
பிரம்மஸ்ரீ. வாசுதேவ ஜெயவஸ்த்தாங்க குருக்கள்.



இங்ஙனம் குருசுவாமி தர்மகர்த்தா
பிரம்மஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார்.



“எல்லோரும் வாருங்கள்” “ஜயனை நாடுங்கள்”
“புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit

திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில்

முனீசுவரர்
கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஒரு முனீசுவரர் கோயில். இக்கோயில் திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு அண்மையில் நாற்சந்தியைப் பார்த்தவண்ணம் மேற்கு நோக்கிக் காட்சி தருகின்றது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வரலாறு

குளக்கோட்டு மன்னன் திருக்கோணேசுவரப் பெருமானுக்கு திருப்பணி செய்யும் வேளை கோணேசுவர மூர்த்திக்கு காவலுக்கென திருமலையின் ஏழு இடங்களில் ஏழு முனிகளை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது. அவ் ஏழு முனிகளுள் வெளிப்பட்டு நின்று அடியாரைக் காத்து வருபவராக கோட்டடிப் பதியில் அமர்ந்திருக்கும் கோட்டடி முனீசுவரர் திகழ்கின்றார்.
ஆதியில் பெரும் ஆல விருட்சம் ஒன்று இப்பகுதியில் இருந்ததாகவும் இதிலே முனியப்பர் வாசம் செய்ததாகவும் இரவு வேளைகளில் மதுவெறியில் அல்லது தனியாக வருவோர், தீய எண்ணங்களுடன் வருவோர் போன்றோரை இவ்வழியால் செல்ல விடாது மிகவும் துன்புறுத்தியதாகவும், இதனால் தாங்கள் இவருக்கு அஞ்சி சாராயம், சுருட்டு என்பவற்றை வைத்து வழிபட்டதாகவும் இப்பகுதிக்கு அண்மையிலுள்ள "நாகராஜா வளவு" மக்கள் குறிப்பிடுவர். இதே வழக்கத்தில் இன்றும் இவர்கள் தங்கள் விஷேஷ காலங்களில் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன், நேர்த்தி நிறைவேறியவுடன் ஆலயத்திற்கு வந்து தங்கள் முறையில் சாராயம் வைத்தும், சுருட்டு வைத்தும் வழிபடுவர். ஆனால் ஆலயத்தினுள் இவையெவையும் எடுக்கப்படுவதில்லை. ஆலயத்தின் வெளிப்புறமுள்ள வேம்பின் அடியில் சிறு பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இதன் கீழ் வைத்தே இவர்களது வழிபாடு இடம்பெறும்.

[தொகு] ஆலய அமைப்பு

தயாநிதி என்பவரது முயற்சியினாலேயே வெறும் கல் மாத்திரம் வணங்கப்பட்ட நிலைமாறி கட்டடம் ஒன்று அமைக்கபட்டது. ஆலயம் வீதியின் புறத்திலும், நீதிமன்ற கட்டடத் தொகுதியின் அருகாமையிலும் அமைந்துள்ளமையினால் ஆலயத்திற்கெனத் தனியானதொரு அசையாத நிலம் இல்லை. ஆயினும், கருவறை மாத்திரம் கொண்டதாக முன்புறத்தில் சிறிய அளவினால் தகரத்தினால் கொட்டகை போன்றும் அமைக்கப்பட்டு அடியார்கள் நின்று வழிபட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

[தொகு] மூர்த்தி

ஆலயத்தின் மூலமூர்த்தி சுயம்புருவ மூர்த்தியாகும். தனிக் கருங்கல்லினால் ஆனதாக தட்டையான சிவலிங்க வடிவில் அமையப்பெற்றுள்ளது. இம் மூர்த்திக்கு வெள்ளியினால் அங்கி அமைத்து வைத்து வழிபாடு இயற்றப்பெறுகின்றது. தவிர கடந்த வருடம் பஞ்சலோகத்தினால் ஆன எழுந்தருளி மூர்த்தி "புலி வாகனம்" ஏறியவராக அமைக்கப்பெற்று அவரும் இடவசதி இன்மையினால் கருவறையினுள்ளேயே வைக்கப்பட்டுள்ளார்.

[தொகு] பூசை விபரம்

ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் மாலைவேளையில் பெருமானுக்கு பூசைகள் இடம்பெறுகிறது. சித்திரா பௌர்ணமி நாளன்று தீர்த்தம் (குளிர்த்திப் பூசை) நடைபெறுவதாக முன்வரும் 6 நாட்களுக்கு அலங்கார உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை. தவிர, இந்து சிறப்பு காலங்களில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகிறது.

[தொகு] நிதி

ஆலயத்திற்கென தனியானதொரு வருமானம் எதுவும் இல்லை. காணிக்கை உண்டியல் மூலம் வரும் நிதியும், அர்ச்சனைகள், திருவிழா உபயங்கள் என்பவற்றிற்கு வருகின்ற நிதியுதவிகள் மூலமே ஆலய செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்தின் இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளில் (மத்திய கிழக்கு நாடுகளில்) இருந்து தம்மால் இயன்றபோது சிறுதொகைகளை வழங்குகின்றனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit